ஹங்வெல்ல கொலைச்சம்பவம் : இரண்டு சந்தேக நபர்கள் கைது

ஹங்வெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  தும்மோதர குமாரி எல்ல பகுதியில் கடந்த 06 ஆம் திகதி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
வரக்காப்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய நபரொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் ஹங்வெல்ல பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் வரக்காபொல பிரதேசத்தில் வைத்து நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
தோலவத்த மற்றும் ஹேவாதுன்ன ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 24 மற்றும் 47 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்