
ஹங்கேரியாவின் ஜனாதிபதி பதவி விலகினார்
பாலியல் துஷ்பிரயோக வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவருக்கு பொதுமன்னிப்பு வழங்கியதையடுத்து ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் ஹங்கேரியாவின் ஜனாதிபதி பதவி விலகலை அறிவித்துள்ளார்.
ஹங்கேரியாவின் ஜனாதிபதி கட்டலின் நோவாக்கின் முடிவு நீண்டகாலமாக தேசியவாத அரசாங்கத்திற்கு முன்னோடியில்லாத அரசியல் ஊழலை கட்டவிழ்த்து விட்டதாக குறிப்பிடப்படுகிறது.
46 வயதான ஹங்கேரியாவின் ஜனாதிபதி கட்டலின் நோவாக், தொலைக்காட்சி ஒன்றின் நேரலை நிகழ்ச்சி ஒன்றின் ஊடாக ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
அவர் 2022 முதல் பதவி வகித்து வருகிறார்.
ஒரு வாரத்திற்கும் மேலாக பொதுமக்களின் எதிர்ப்புக்கு பின்னர் ஜனாதிபதியால் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு அரசால் நடத்தப்படும் குழந்தைகள் இல்லத்தில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களை மறைத்ததற்காக குற்றவாளி ஒருவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
“நான் மன்னிப்பு வழங்கினேன், இது பலருக்கு குழப்பத்தையும் அமைதியின்மையையும் ஏற்படுத்தியது.
நான் ஒரு தவறு செய்துவிட்டேன் என ஹங்கேரியாவின் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்
