ஹங்குரன்கெத்தவில் பகுதியில் விபத்து – பெண் ஒருவர் பலி

கண்டி ஹங்குரன்கெத்த பகுதியில்  இன்று வெள்ளிக்கிழமை  இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.

பேருந்தும் முச்சக்கர வண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளதுடன் அவர்கள் ரிகில்லகஸ்கட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் கண்டி தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் பெண் ஒருவரும் இரண்டு ஆண்களும் 7 வயதான சிறுவனும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் உயிரிழந்தவர் முச்சக்கர வண்டியில் பயணித்த 45 வயதான பெண் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.