ஸ்வீடனில் வேறு இடத்துக்கு மாற்றப்படட 113 ஆண்டு கட்டடம்

ஸ்வீடனில், ஒரு சிறிய நகரமே வேறு இடத்துக்கு மாற்றப்பட்ட நிலையில், மரத்தால் கட்டப்பட்டுள்ள, 113 ஆண்டு பழமை யான சர்ச், 5 கி.மீ துாரத்துக்கு நகர்த்தும் முயற்சி துவங்கியுள்ளது.

இது ஐரோப்பிய நாடான ஸ்வீடனின் வடக்கே உள்ளது கிருனா நகரம்.

இக் கட்டடம் மொத்தம், 19,500 சதுர கி.மீ பரப்பளவு உள்ள இந்த நகரில், 23,000 பேர் வசித்து வந்தனர்.

இந்த நகருக்கு அருகே அமைந்துள்ளது. மிகப்பெரிய இரும்புத் தாது ஆலை.

பூமிக்கு அடியில், 4,000 அடி ஆழத்தில் மிகப்பெரிய அளவில் இரும்புத் தாதுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த நகரில் உள்ள வீடுகள் உள்ளிட்டவற்றை, அருகே புதிதாக உருவாக்கப்பட்ட நகருக்கு மாற்றும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.