ஸ்ரீ முருகன் தேவஸ்தான தேர் திருவிழா
கல்முனை நகர் ஸ்ரீ முருகன் தேவஸ்தான பிரமோட்சவ விழா கடந்த 2 ஆம் திகதி கொடியேற்றதுடன் ஆரம்பமாகி இன்று புதன் கிழமை தேரோட்டம் இடம்பெற்றது.
கல்முனை முருகன் தேவஸ்தானத்தில் இருந்து ஆரம்பித்த தேர் திருவிழா கல்முனை நகர் வழியாக தால வெட்டுவான் சந்தி வரை சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த திருவிழா நாளை நடைபெறும் தீர்த்தோற்சவத்தை தொடர்ந்து கொடியிறக்கத்துடன் நிறைவு பெறவுள்ளது.