“ஸ்ரீ தலதா வழிபாடு” ஆரம்ப நிகழ்வில் பங்கேற்குமாறு வெளியிடப்பட்ட போலி அழைப்பிதழ்

“ஸ்ரீ தலதா வழிபாடு “ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் போலியான அழைப்பிதழ் பிரச்சாரம் செய்யப்படுகிறது.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் பெயரில் போலியாகத் தயாரிக்கப்பட்ட இந்த அழைப்பிதழில் “ஸ்ரீ தலதா வழிபாடு” ஆரம்ப நிகழ்வில் பங்கேற்கக் கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தருமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“ஸ்ரீ தலதா வழிபாடு” ஆரம்ப நிகழ்வுக்கு இந்த வகையான சிறப்பு அழைப்பிதழ் யாருக்கும் வழங்கப்படவில்லை எனவும் , இந்த போலி ஆவணத்தின் அடிப்படையில் ஸ்ரீ தலதா வழிபாட்டுக்காகச் சிறப்பு (வி.ஐ.பி) வரிசை அமைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் போலியான செய்திகள் பரவி வருவதுடன், அதில் எந்த உண்மையும் இல்லை எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்