ஸ்ரீ சத்ய சாய் சஞ்சீவனி மருத்துவமனையில் இருதய நோயாளிகளுக்காக நவீன சிகிச்சைக் கூடம்
-களுதாவளை நிருபர் எஸ்.எஸ்.ஆனந்தன்-
மட்டக்களப்பில் கிரான்குளம் – குருக்கள்மடம் எல்லைப்பகுதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ சத்ய சாய் சஞ்சீவனி மருத்துவமனையில் இருதய நோயாளிகளுக்காக Cath Lab எனும் நவீன சிகிச்சைக் கூடம் நிறுவப்பட்டு கடந்த 2023 யூன் மாதம் தொடக்கம் மக்களின் சேவைக்காக இயங்கி வருகிறது.
இவ் உயிர்காக்கும் விலை உயர்ந்த சிகிச்சையானது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இருதய சிகிச்சை பிரிவுடன் இணைந்து முற்றிலும் இலவசமாக நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது.
கிழக்கு மாகாணத்தில் இவ் சிசிச்சையை பெற வசதியில்லாதிருந்த காலத்தில் இச் சிசிச்சைக்காக வேறு மாவட்டங்களுக்கே நோயாளிகள் காத்திருப்போர் பட்டியலில் தங்களின் முறை வரும் வரை (சில சமயம் வருடங்கள் கூட) காத்திருந்தே இச் சிகிச்சையை பெற நேர்ந்தது.
ஸ்ரீ சத்ய சாய் சஞ்சீவனி மருத்துவமனையில் இவ் வசதி ஆரம்பித்த கடந்த 8 மாதங்களுக்குள் 750 க்கும் அதிகமான இருதய நோயாளர்கள் இச் சிகிச்சையின் நற்பலனை பெற்றுள்ளனர்.
மேலும், கேத் லேப் இருதய சிகிச்சை ஆரம்பத்தில் வாரத்திற்கு இரண்டு முறை நடத்தப்பட்டது.
எனினும் உயிர்காக்கும் இச் சிகிச்சையின் அத்தியாவசிய தேவை கருதி இச் சிகிச்சை தற்சமயம் வாரத்திற்கு மூன்று தடவைகள் போதனா வைத்திய சாலை வைத்திய குழுவுடன் இணைந்து வழங்கப்படுகிறது.
இங்கு சிசிச்சை பெறுவதற்கான நோயாளிகளின் தெரிவானது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இருதய சிசிச்சை பிரிவில் சேவையாற்றி வரும் விசேட மருத்துவ நிபுணர்களால் (Consultant Cardiologists) பல முன்னாயத்த மருத்துவ சோதனைகளின் பின்னர் தீர்மானிக்கப் பட்டு, நோயின் தீவிர தன்மைக்கேற்ப வகைப்படுத்தப் பட்டு, நியதியின்படி அங்கிருந்து சிசிச்சைக்காக ஸ்ரீ சத்ய சாய் சஞ்சீவனி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிசிச்iசையளிக்கப்படுகிறது.
மிகவும் பணச் செலவு கூடிய இச் சிசிச்சை முறையானது ஒரு குடுப்பத்தில் மிக முக்கிய அங்கமான ஒரு தகப்பனையோ தாயையோ அல்லது ஒரு முக்கிய குடும்ப உறுப்பினரையோ அக்குடும்பம் இழந்து விட கூடாது என்ற முனைப்புடன் ஓரு உலகம் ஒரு குடும்பம் என்ற கோட்பாட்டை அனுசரித்து அளப்பெரும் சேவையாற்றிவரும் சற்குரு ஸ்ரீ மதுசூதன் சாய் தலமைத்துவத்தில் முற்றிலும் இலவசமாக ஸ்ரீ சத்ய சாய் சஞ்சீவனி மருத்துவமனையினால் எவ்வித இன மத பாகுபாடுமின்றி மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக வழங்கப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்