ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்துக்கு புதிய பணிப்பாளர் மற்றும் சபை உறுப்பினர்கள் நியமனம்

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பங்குகள் தனியாருக்கு வழங்கப்படவுள்ள நிலையில், அந்த நிறுவனத்துக்கு புதிய பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் கீழ் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி ஏ.கே.டி.டி.டி.அரந்தரா அதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்

ஏனைய பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக கலாநிதி கே.ஏ.எஸ்.கீரகல, சட்டத்தரணி தினேஸ் விதானபத்திரன, பேராசிரியர் கே.எம்.லியனகே மற்றும் டி.எம்.ஐ.எஸ்.தசநாயக்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்

சதுர மொஹொட்டிகெதர, திறைசேரி பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதற்காக கோரப்பட்ட கேள்வி மனுவின் அடிப்படையில் இந்தியாவின் செல்வந்தரான அம்பானியின் நிறுவனம், சீனாவின் நிறுவனம் ஒன்று உள்ளிட்ட மூன்று நிறுவனங்கள் தமது விலை மனுக்கோரல்களை சமர்ப்பித்துள்ளன.