ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளராக சாமர சம்பத் தசநாயக்க நியமனம்

-மஸ்கெலியா நிருபர்-

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய தேசிய அமைப்பாளராக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் பொதுச்செயலாளர் நிமால் ஸ்ரீபாலடி சில்வா நியமணக் கடிதத்தினை பெற்றுக்கொண்ட பின்னர் அவர் நேற்று திங்கடகிழமை தேசிய அமைப்பாளராக உத்தியோகபூர்வமாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் ஒன்றுகூடிய கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், கட்சியின் எதிர்கால அரசியல் நலனை கருத்தில் கொண்டும் மற்றும் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை கவனத்திற்கொண்டே இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக தெரிவித்தனர்.

இந்த நியமனம் மூலம் கட்சியின் அமைப்பு பலப்படுத்தப்படும் என்றும், மாகாண மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் கட்சியின் செயற்பாடுகள் மேலும் வலுப்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் பல கட்சிகளின் உயர்பீட உறுப்பினர்களும் , முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துக் கொண்டிருந்தார்கள் .

இந்நிகழ்வில், பல கட்சிகளின் முக்கியஸ்த்தர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.