ஸ்மிருதி மந்தனா முதலிடம்

ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் மகளிருக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியாகியுள்ளது.

இதில் துடுப்பாட்ட வீராங்கனைகளுக்கான தரவரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 791 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளார்.

சமீபத்தில் இடம்பெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தொடர்ச்சியாக சதங்களை விளாசிய நிலையில் அவர் முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.

தரவரிசையில் இங்கிலாந்து அணியின் நாட் சீவர்-புருன்ட் 731 புள்ளியுடன் 2வது இடத்தில் உள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவின் பெத் மூனி 713 புள்ளியுடன் 3வது இடத்திலும், தென்னாப்பிரிக்காவின் தஸ்மின் பிரிட்ஸ் 4வது இடத்திலும் உள்ளனர்.