
ஷேக் ஹசீனா மீது கொலைக் குற்றம்
உள்நாட்டுக் கலவரத்தின் போது நபர் ஒருவர் பொலிஸாரினால் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தலைநகர் டாக்காவில் பல வாரங்களாக நிலவிய அமைதியின்மையைத் தொடர்ந்து முந்தைய அரசாங்கத்திலிருந்த மேலும் 6 முக்கிய நபர்களுக்கு எதிராகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பில் பிரஜையொருவர் தாக்கல் செய்துள்ள வழக்கில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்டோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் 19ஆம் திகதியன்று முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் உத்தரவில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
