ஷேக் ஹசீனா உள்ளிட்ட 45 பேருக்கு எதிராகப் பிடியாணை!

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. .

அதன்படி பங்களாதேஷில் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் போது இழைக்கப்பட்ட குற்றங்களுக்காக அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு இந்த பிடியாணையைப் பிறப்பித்துள்ளது

ஷேக் ஹசீனாவின் கட்சியைச் சேர்ந்த பொதுச் செயலாளர் மற்றும் ஹசீனாவின் அரசியல் கட்சியின் ஏனைய உயர்மட்டத் தலைவர்கள் உள்ளிட்ட 45 பேருக்கு எதிராகவும் இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஷேக் ஹசீனாவை நவம்பர் 18ஆம் திகதிக்குள் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்