வௌ்ளை மற்றும் சிவப்பு பச்சரிசியின் அதிகபட்ச சில்லறை விலை

நுகர்வோர் விவகார அதிகார சபை நேற்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஒரு கிலோகிராம் வௌ்ளை பச்சரிசி மற்றும் சிவப்பு பச்சரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 210 ரூபா ஆகும்.

அத்துடன், இந்த விலைகளை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.