வௌ்ளத்தில் மூழ்கிய மஹியங்கனை வைத்தியசாலை

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மஹியங்கனை ஆதார வைத்தியசாலையின் பல வாட்டுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளம் ஏற்பட்ட வாட்டுகளில் இருந்த நோயாளிகள் மேல் தளங்களில் உள்ள வாட்டுகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர் .

வைத்தியசாலையில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம் , பதுளை வைத்தியசாலையின் பல வாட்டுகளும் நேற்று மாலை வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், தற்போது வௌ்ளநீர் வடிந்துள்ளதாக கூறப்படுகிறது.