வைரஸ் காய்ச்சல் தொடர்பில் அவதானம்

காலநிலை மாற்றம் போன்ற காரணங்களால் சிறுவர்களிடையே வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக சுகாதார திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

முதியவர்களிடமும் வைரஸ் காய்ச்சல் பரவுவது அதிகரித்துள்ளதால், மூச்சு விடுவதில் சிரமம், தலைவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ ஆலோசனைகளைப் பெறுமாறு சிறுவர் நோய் தொடர்பான விசேட நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.