
வைரலான பொலிஸாரின் காணொளி: விசாரணைகள் ஆரம்பம்
பொலிஸ் அதிகாரிகள் சிலர், பணியின் போது பொலிஸ் துறைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டமை தொடர்பில் வெளியான காணொளி குறித்து பொலிஸ் விசேட விசாரணை பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பொலிஸ் துறைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையிலான காணொளி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
குறித்த காணொளியில் பொலிஸ் அதிகாரிகள் சிலர் உறங்குவது தொடர்பான காட்சிகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் மிகுந்த அவதானம் செலுத்தியுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்திட்யசகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
