வைத்தியர் மர்மமான முறையில் மரணம்

தம்புத்தேகம ஆதார வைத்தியசாலையின் குருதி பரிமாற்ற பிரிவில் சேவையாற்றும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் வைத்தியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

35 வயதுடைய குறித்த வைத்தியர் சேவைக்கு சமுகமளிக்காததால் சிற்றூழியர்கள் அவர் தங்கியிருந்த விடுதிக்கு சென்ற போது, அவர் விடுதியினுள் உயிரிழந்து கிடந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

மேகுறித்த வைத்தியரது மனைவி வேறு வைத்தியசாலையில் பல் வைத்தியராக கடமையாற்றுவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

வைத்தியர் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், சடலம் மீதான பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளது.

பொலிஸார், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை ற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்