வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகளுக்கு பிணை
நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகளை ஐந்து இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளை அச்சுறுத்தியதாகக் கூறி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பிணை வழங்கப்பட்டுள்ளது.