வைத்தியர் அர்சுனாவிக்கு 7ஆம் திகதி வரை விளக்கமறியல்-வீடியோ இணைப்பு-

-மன்னார் நிருபர்-

மன்னார் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்தமை மற்றும் பெண்கள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்தமை , அரச சேவைக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளை முன்வைத்து இன்று சனிக்கிழமை நண்பகல் கைது செய்யப்பட்ட வைத்தியர் அர்சுனா விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வைத்தியர் அர்சுனவை மன்னார் நீதவான் நீதிபதியின் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்திய நிலையில் வைத்தியர் அர்சுனாவை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மன்னார் வைத்தியசாலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற சம்பவத்தின் காணொளி

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்