வைத்தியர்கள், சட்டத்தரணிகள் வீட்டில் திருடிய மூவர் கைது

தெஹிவளை பிரதேசத்திலுள்ள வைத்தியர்கள் மற்றும் சட்டதரணிகளின் வீடுகளில் பணம் மற்றும் பொருட்களை திருடிய சந்தேகத்தில் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களால் திருடப்பட்டதாகக் கூறப்படும் 20 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள், மடிக்கணினிகள், தையல் இயந்திரம், பழங்கால பித்தளை பொருட்கள், கைத்தொலைபேசிகள், கறுப்புக் கண்ணாடிகள், சுவர் துளையிடும் இயந்திரங்கள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.