
வைத்தியரை தாக்கிய மூவருக்கு விளக்கமறியல்!
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் வைத்து வைத்தியர் ஒருவரை தாக்கிய மூவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 17 ஆம் திகதி இரவு வைத்தியர் ஒருவர் உரும்பிராய் சந்தியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அவர் மீது ஒரு குழுவினர் தாக்குதல் நடாத்தினர்.
பின்னர் குறித்த வைத்தியர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார்.
இவ்வாறான சூழ்நிலையில், தாக்குதலை மேற்கொண்ட மூவர் கடந்த வியாழக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை, அவர்களை எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
