வைத்தியரை கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்த யாசகர்

யாசகம் கேட்டு தர மறுத்ததால் யாசகர் ஒரு வைத்தியர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்துள்ளார்.

இச்சம்பவம் தலங்கம பத்தரமுல்ல பிரதேசத்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாலபே  பொத்துவார வீதியில் வசிக்கும் 57 வயதுடைய ஆயர்வேத வைத்தியர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வைத்தியர் பல்பொருள் அங்காடியில் இருந்து வெளியேறும் போது அங்கு இருந்த யாசகருக்கு பணம் கொடுக்க மறுத்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து குறித்த யாசகர் வைத்தியரை கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் பல்பொருள் அங்காடியில் உள்ள சி.சி. டிவியில் பதிவாகியுள்ளது.

தப்பி ஓடிய குறித்த யாசகரை கைது செய்வதற்கான முயற்சிகளை தலங்கம பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.