வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தரால் நாய் மீது வாயு துப்பாக்கி பிரயோகம்
-வவுனியா நிருபர்-
வவுனியா வைத்தியசாலையில் நாய் ஒன்று வாயு துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளது.
வவுனியா வைத்தியசாலையில் கடமையாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே நேற்று வியாழக்கிழமை இவ்வாறு சுட்டுக் கொலை செய்துள்ளார்.
வைத்தியசாலையின் பிரேத அறையருக்கில் நின்ற நாய் மீதே பாதுகாப்பு உத்தியோகத்தர் தன்னிடம் இருந்த வாயு துப்பாக்கியை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் படுகாயமடைந்த நாய் மரணித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் நாய் காப்பகம் ஒன்றை நடத்தி வருபவர் வைத்தியசாலை பணிப்பாளரிடம் இன்று வெள்ளிக்கிழமை முறைப்பாடு செய்துள்ளார்.
இதேவேளை சம்பவம் குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பணிப்பாளர் இதன்போது உறுதியளித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்