வைத்தியசாலையை தரமுயர்த்தி தருமாறு மக்கள் கோரிக்கை!

 

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவில் உள்ள தருமபுரம் வைத்தியசாலையில் போதிய அளவிலான புதிய கட்டிடங்கள் வசதிகள் இருந்த போதிலும் மக்களுக்கான சிகிச்சை முழுமையாக பெற முடியாத நிலையில் உள்ளதாக நோயாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்

21 கிராமங்களுக்கு அதிகமான மக்கள் தமது வைத்திய சேவையினை தருமபுரம் வைத்தியசாலையிலேயே பெற்று வருகின்றனர்

இருப்பினும் தருமபுர வைத்தியசாலையில் ஒரே ஒரு வைத்தியரே பணியில் உள்ளார்.

இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளர்கள் ஒரு நாள் பொழுதை வைத்தியசாலையிலேயே கழிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது

நாளாந்தம் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள், கிளினிக் நோயாளர்கள், அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளர்கள், என அனைவரையும் ஒரே ஒரு வைத்தியரே கவனிக்க வேண்டியுள்ளது.

தருமபுரம் வைத்தியசாலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் மகப்பேற்று வசதி குருதி பரிசோதனை அவசர சிகிச்சை பிரிவு என பல சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தது

தற்பொழுது குருதி பரிசோதனை செய்வதாயின் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது

எனவே தருமபுர வைத்தியசாலையை தரம் உயர்த்தி சிறந்த சிகிச்சை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் தெரிவித்தனர்