வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் தீ
வெல்லவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹிரிபிட்டிய பிராந்திய வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மருந்துகள் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த அலுமாரிக்கு அருகில் மின் ஒழுக்கு ஏற்பட்டதன் காரணமாக தீப்பிடித்ததுள்ளமை தெரியவந்தது.
இதன்படி களஞ்சியசாலையில் இருந்த மருந்துகளில் ஒரு சிறிய பகுதி தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
