வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் பணியாற்றிய இளம் வைத்தியர் உயிரிழப்பு!
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின், சிறுவர் விடுதியில் பணியாற்றி வந்த இளம் வைத்தியர் ஒருவர், திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
அம்பாறை காரைதீவை பிறப்பிடமாக கொண்ட, மட்டக்களப்பு அரசடியில் வசித்து வந்த, செல்வராஜா பிரணவசோதி (வயது 31) என்ற வைத்தியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வைத்தியசாலையில் நேற்று வெள்ளிக்கிழமை, தனது கடமை முடிந்து விட்டு வீடு திரும்பிய அவர், உறங்கிக் கொண்டு இருந்த போது திடீரென வாந்தி எடுத்த நிலையில், மட்டு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
எனினும், அவர் போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக, வைத்தியசாலை தகவல்கல் தெரிவிக்கின்றன.
மருத்துவ படிப்பை நிறைவு செய்த வைத்தியர் செல்வராஜா பிரணவசோதி, நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு நியமனம் பெற்று அங்கு பணியாற்றி , அதன்பின் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு இடம்மாற்றம் பெற்று, இங்கு பணியாற்றிய நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நீதிமன்ற பணிப்புக்கமைவாக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்ட பின், சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
