
வைத்தியசாலைக்கு முன்பாக குப்பைகளை வைத்து விட்டு சென்றவர்கள் யார்?
-மஸ்கெலியா நிருபர்-
டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக, தனியார் நிறுவனம் ஒன்றின் பெயர் பொறிக்கப்பட்ட பொலித்தீன் பைகளில், குப்பைகள் நிரப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த கழிவுகளை டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலை பகுதியில் போட்டது யார் என்பது தொடர்பான தகவல்கள் தெரிய வரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலையில் உள்ள அதிகாரிகள் இது குறித்து பாதுகாப்பு கமாராக்களின் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்தனர்.
