
வைத்தியசாலைகளில் குவிக்கப்படும் முப்படையினர்
வைத்தியசாலைகளின் நோயாளர் உதவிப் பணிகளுக்காக 1,200 முப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மருத்துவர்கள் தவிர்ந்த 72 சுகாதார தொழிற்சங்கத்தினர் சுகயீன விடுமுறையை அறிவித்து முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பின் காரணமாக சுகாதார அமைச்சினால் பாதுகாப்பு அமைச்சிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியிலுள்ள 48 வைத்தியசாலைகளின் செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுப்பதற்காக 900க்கும் அதிகமான இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரசிக குமார தெரிவித்துள்ளார்.
அத்துடன், 200க்கும் மேற்பட்ட வான்படை மற்றும் கடற்படை சிப்பாய்களும் வைத்தியசாலையின் செயற்பாடுகளுக்கு உதவியாக அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், தேவைக்கு ஏற்றவாறு மேலதிக படையினரை வைத்தியசாலைகளுக்கு அனுப்பவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரசிக குமார தெரிவித்துள்ளார்.
