
வேலூரில் தவறான சிகிச்சையால் இளம்பெண் உயிரிழப்பு
இந்தியாவில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே தவறான சிகிச்சையால் இளம் பெண் உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரத்தில் போலி பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
பிச்சனூர்பேட்டையைச் சேர்ந்த பிரியங்கா ( வயது 24 ) என்பவரே உயிரிழந்தார்.
குறித்த பெண் காய்ச்சல் காரணமாக காளியம்மன் பட்டியிலுள்ள கிளினிக்கில் சிகிச்சை பெற்று உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சுகாதாரத்துறையினர் நடத்திய விசாரணையில் சிகிச்சையளித்த பிரியா டிப்ளமோ நர்சிங்கை பாதியோடு நிறுத்தி விட்டு அலோபதி வைத்தியம் பார்த்து வந்தது தெரிய வந்தது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
