வேலணை சலஞ்சேஸ் அணி “சலஞ்சேஸ் – ரைற்ரன்ஸ்” வெற்றிக் கிண்ணத்தை வென்றது

-யாழ் நிருபர்-

தீவகத்தின் முதன்மைச் சுற்றுப் போட்டியான “சலஞ்சேஸ் – ரைற்ரன்ஸ்” வெற்றிக் கிண்ணத்துக்கான மென்பந்து கிறிக்கெற் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில்

வேலணை சலஞ்சேஸ் அணி வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்ததுடன் வென்றது. மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கான வெற்றியாளர்களாகவும் தெரிவாகியது.

தீவகத்தை உள்ளடக்கிய வகையில் வேலணை சலஞ்சேஸ் மற்றும் ரைற்ரன்ஸ் கழகங்கள் இணைந்து வருடா வருடம் 10 பந்துப் பரிமாற்றங்களை கொண்டதாக நடத்திவரும்

குறித்த மென்பந்துச் சுற்றுப் போட்டியில் இவ்வாண்டுக்கான போட்டி கடந்த 15 ஆம் திகதிமுதல் 17 ஆம் திகதிவரையான மூன்று நாள்கள் 24 அணிகளின் பங்கேற்புடன் வேலணை உப்புக்குழி மைதானத்தில் நடைபெற்றது.

கடந்த மூன்று நாள்களாக நடைபெற்றுவந்த சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி நேற்று பிற்பகல் நடைபெற்றது.

மேலும், இறுதி நிகழ்வின் பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சர் டக்கஸ் தேவானந்தாவும், சிறப்பு விருந்தினர்களாக வேலணை பிரதேச சபையின் பகுதி பிரதேச செயலர் க.பார்த்தீபனும், கௌரவ விருந்தினராக வேலணை பிரதேச சபையின் தலைவர் சி.அசோக்குமர்,

வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த், கிராம உத்தியோகத்தர் பா.தனுருத்தினி மற்றும் ந.ஜீவனதாஸ்,க நாகதீபன், வ.கஜமுகன் உள்ளுட்டோர் நிகழ்வை சிறப்பிக்க அழைக்கப்பட்டிருந்தனர்.

இச் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் வேலணை சலஞ்சேஸ் அணியுடன் அல்லைப்பிட்டி சென்பிலிப்ஸ் அணி மோதிய நிலையில்,

சென்பிலிப்ஸ் அணி முதலில் துடுபெடுத்தாடி 9 பந்துப் பரிமாற்றங்களுக்கு முகம் கொடுத்து அனைத்து இலக்குகளையும் இழந்து 62 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சலஞ்சேஸ் அணி 9 பந்துப்பரிமாற்றங்களை எதிர்கொண்டு 6 இலக்குகளை இழந்து 4 இலக்குகளால் வெற்றி பெற்றது.

இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கான கிண்ணத்தை பிரதம அதிதியின் சார்பில் கலந்துகொண்ட திருமதி அனுசியா ஜெயகாந்த் வழங்கிவைத்த நிலையில்

ஏனைய கிண்ணங்களை நிகழ்வில் கலந்துகொண்ட விருந்தினர்கள் வழங்கிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வேலணை சலஞ்சேஸ் அணி "சலஞ்சேஸ் - ரைற்ரன்ஸ்" வெற்றிக் கிண்ணத்தை வென்றது
வேலணை சலஞ்சேஸ் அணி “சலஞ்சேஸ் – ரைற்ரன்ஸ்” வெற்றிக் கிண்ணத்தை வென்றது