வேன் விபத்துக்குள்ளானதில் மாணவி உயிரிழப்பு

வென்னப்புவ தும்மலதெனிய பிரதேசத்தில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி வீதிக்கு அருகாமையில் சென்று கொண்டிருந்த இரு சிறுமிகள் மற்றும் பெண் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மாரவில வைத்தியசாலையில் படுகாயமடைந்த மூவரும் அனுமதிக்கப்பட்ட நிலையில், வென்னப்புவ கரையோர வீதி பகுதியில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்