வேன் ஒன்று மரத்துடன் மோதி விபத்து : 11 பேர் படுகாயம்

-பதுளை நிருபர்-

ஹாலிஎலயில் வேன் ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 11பேர் பதுளை வைத்தியசாலையில் அனுமதி.

நேற்று சனிக்கிழமை இரவு தோவ விகாரைக்கு பதுளையில் இருந்து சென்ற நடன குழுவினர் மீண்டும் பதுளை பகுதிக்கு இன்று அதிகாலை திரும்பும் வேளையில் பதுளை பண்டாரவளை வீதியில் ஹாலிஎல பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக உள்ள பாரிய மரம் ஒன்றில் மோதி வேன் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் பயணித்த 11 பேர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களுள் 8 பெண்களும் 3 ஆண்களுமாக 20 வயதுக்கு குறைந்தவர்களே வேனில் பயணித்ததாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் 7 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியாத போதிலும் மேலதிக விசாரணைகளை ஹாலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்