
வேட்பு மனுவில் கையொப்பமிட்டார் நாமல்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ இன்று புதன் கிழமை வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.
விஜேராமவிலுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில்வேட்பு அவர் மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் நாளை வியாழக்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பமாகி முற்பகல் 11 மணி வரை நடைபெறவுள்ளது.
வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் தினத்தில் தேர்தல் அலுவலகம் அண்மித்த பகுதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
