
வேட்புமனு தாக்கல் செய்த சஜித்: பட்டாசு கொழுத்தி கொண்டாடிய மக்கள்
-மூதூர் நிருபர்-
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாஷ இன்று வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தமையினை முன்னிட்டு மக்கள் பட்டாசு கொழுத்தி கொண்டாடியுள்ளனர்.
திருகோணமலை – சேருநுவர பகுதியின் ஐ.ம.ச ஆதரவாளர்கள் சேருநுவர நகரிலுள்ள மணிக்கூட்டு கோபுரச் சந்தியிலேயே பட்டாசு கொழுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதேவேளை கொழுத்திய பட்டாசுகளின் துகல்களை அவர்கள் துப்பரவு செய்ததையும் அவதானிக்க முடிந்தது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

