வேட்பாளர்கள் சொத்து, பொறுப்பு விபரங்களை சமர்ப்பிப்பது கட்டாயம்
வேட்புமனு தாக்கல் செய்யும் ஒவ்வொரு வேட்பாளரும் அன்றைய தினம் தங்களது சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான விபரங்களைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்யும் அனைத்து வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் அதே தினத்தில் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான தகவல்களை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.
அதேநேரம், பொதுத் தேர்தலின் போதான பாதுகாப்பு கருதி அனைத்து முன்னாயத்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்