வேட்டை விலங்குகளுக்கு செல்லப்பிராணிகள் தானம்.
டென்மார்க்கில் உள்ள ஒரு காட்டுயிர் சரணாலயத்தில் மக்கள் தங்களுக்கு தேவையில்லாத ஆரோக்கியமான செல்லப்பிராணிகளை சரணாலயத்தில் உள்ள வேட்டை விலங்குகளுக்கு உணவாக கொடுப்பதற்கு தானமாக வழங்குமாறு உயிரியல் பூங்கா கேட்டுள்ளது.
அதில் கோழிகள், முயல்கள் மற்றும் கினிப் பன்றிகளை நன்கொடையாகக் கேட்டுள்ளது. அவை பயிற்சி பெற்ற ஊழியர்களால் வலியின்றி கொல்லப்படும்.
உயிருள்ள குதிரையை தானமாக வழங்கினால்இ வரிச் சலுகைக்கூட கிடைக்கும். ஆனால் குதிரைக்கு பாஸ்போர்ட் (Horse passport) இருக்க வேண்டும்.
இவ்வாறு வழங்கப்படும் உணவு “காடுகளில் இயற்கையாக வேட்டையாடுவதை விலங்குகளுக்கு நினைவூட்டுகிறது” என காட்டுயிர் சரணாலயம் கூறுகிறது.
இங்கு சிங்கங்கள் மற்றும் புலிகளும் வசிக்கின்றன. வார நாட்களில் சிறிய விலங்குகளை தானம் செய்யலாம், ஆனால் முன்பதிவு இல்லாமல் ஒரே நேரத்தில் நான்கு விலங்குகளுக்கு மேல் தானம் செய்ய முடியாது. எனவும் கூறப்பட்டுள்ளது.
