
பா.ரஞ்சித் தற்பொழுது வேட்டுவம் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
குறித்த திரைப்படத்தில் கதாநாயகனாக கெத்து தினேஷ் நடிக்கவுள்ளதுடன், ஆர்யா வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
அத்துடன் மணிகண்டன் இத்திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தில் முழு நேர கதாநாயகியாக சோபிதா துலிபாலா நடித்துள்ளார்.
இது தொடர்பான தகவலை படக்குழு அறிவித்துள்ளது.
இவர் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
