வேக வைத்த முட்டையின் ஓட்டை உரிக்கும் வழிகள்

வேக வைத்த முட்டையின் ஓட்டை உரிக்கும் வழிகள்

வேக வைத்த முட்டையின் ஓட்டை உரிக்கும் வழிகள்

🔷தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, உடல் வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். ஏனெனில் முட்டையில் புரோட்டீன், ரிபோஃப்ளேவின், ஃபோலேட், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், மக்னீசியம், செலினியம் மற்றும் வைட்டமின்களான ஏ, ஈ மற்றும் பி6 போன்றவையும் அதிகம் நிறைந்துள்ளன.

🔷இப்படிப்பட்ட முட்டையை பொரித்தோ, பச்சையாகவோ சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவது தான் நல்லது. ஆனால் முட்டையை வேக வைத்து, அதன் ஓட்டை உரிப்பது என்பது நிறைய பேருக்கு சவாலான ஒன்றாக இருக்கும். ஏனெனில் முட்டையை வேக வைத்துவிட்டு, அதன் ஓட்டை உரிக்கும் போது, வெள்ளைக்கருவின் பெரும்பாலான பகுதி ஓட்டினுடனே வெளியேறி, முட்டையின் அளவு சுருங்கிவிடும்.

🔷இந்த ஒரு காரணத்தினாலேயே பலரும் முட்டையை வேக வைத்து சாப்பிட யோசிக்கிறார்கள். ஆனால் இனிமேல் வேக வைத்த முட்டையின் ஓட்டை எளிதாக எப்படி உரிப்பது என்று பார்ப்போம்.

🔻முட்டையை எப்போதும் 10 நிமிடத்திற்கு அதிகமாக வேக வைக்கக்கூடாது. அப்படி அளவுக்கு அதிகமாக முட்டையை வேக வைத்தால், அதன் ஓட்டில் விரிசல் ஏற்பட்டுவிடும். எனவே 10 நிமிடங்களுக்கு அதிகமாக முட்டையை நீரில் வேக வைக்க வேண்டாம்.

🔻முட்டையை எளிதில் உரிக்க வேண்டுமானால் முதலில் முட்டைகளை சரியாக வேக வைக்க வேண்டும். அதுவும் முட்டையை நீரில் வேக வைக்கும் போது, அந்த நீரில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். இப்படி எண்ணெய் ஊற்றும் போது முட்டை ஓட்டுடன் ஒட்டாமல் இருப்பதோடு, உரிப்பதற்கும் எளிதாக இருக்கும்.

🔻முட்டையை நீரில் வேக வைக்கும் போது, அந்நீரில் சிறிது உப்பு சேர்த்திடுங்கள். இப்படி சேர்க்கும் போது, அது முட்டையின் ஓடு வெடிப்பதைத் தடுக்க உதவி புரியும். இது தவிர உப்பு முட்டையின் வெள்ளைக் கருவும், ஓட்டிற்கும் இடையிலான பிணைப்பை பலவீனப்படுத்தி, எளிதில் முட்டையின் ஓட்டை உரிக்க உதவும்.

🔻வேக வைத்த முட்டையை உரிக்க தொடங்கும் முன், முதலில் அகலமான பகுதியில் தட்டி உரிக்கத் தொடங்குங்கள். இப்படி செய்வதன் மூலம், எளிதில் முட்டையின் ஓட்டை உரிக்கலாம்.

🔻முட்டையை வேக வைத்த பின், அதை நன்கு குளிர வைக்க வேண்டும். அதன் பின் கடினமான மேற்பரப்பில் முட்டையின் ஒருமுனையை மென்மையாக அடிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம், முட்டையின் ஓடு தளர்ந்து, உரிப்பதற்கு வசதியாக இருக்கும்.

🔻வேக வைத்த முட்டையின் ஓட்டை எளிதில் உரிக்க, அவித்த முட்டை நன்கு குளிர்ந்த பின் தரையில் வைத்து, இரண்டு முறை லேசாக தட்டி, பின் தரையில் வைத்து உள்ளங்கையால் லேசாக உருட்டி விட வேண்டும். அதன் பின் ஓட்டை உரித்தால், எளிதில் வந்துவிடும்.

🔻முட்டையை நீரில் வேக வைத்த பின், அதை ஒரு டம்ளரில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதை கைகளால் மூடி 2-3 முறை நன்கு குலுக்க வேண்டும். அதன் பின் முட்டையின் ஓட்டை நீக்க முயற்சித்தால், எளிதில் முட்டையின் ஓடு உரிந்துவிடும்.

🔻வேக வைத்த முட்டையை ஒரு குழிக்கரண்டியினுள் வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின் அந்த கரண்டியை உள்ளங்கையால் மூடி இரண்டு முறை குலுக்கி விடுங்கள். அதன் பின் முட்டையை தட்டி உடைத்தால், ஓடு எளிதில் வந்துவிடும்.

வேக வைத்த முட்டையின் ஓட்டை உரிக்கும் வழிகள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்