வேகமாக பரவும் உருமாறிய கொரோனா வைரஸ்
அமெரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“XFG” எனப்படும் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதாகவும், இது தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய பிறழ்வு பல ஐரோப்பிய நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது .
இதேநேரம் “XFG” பிறழ்வு முதன்முதலில் தென்கிழக்கு ஆசியாவில் ஜனவரி மாதம் கண்டறியப்பட்டது.
ஜூன் மாதமளவில் “XFG” பிறழ்வின் தாக்கம் அமெரிக்காவில் தாக்கத்தை செலுத்த ஆரம்பித்துள்ளது
