
வெள்ள நிலமையில் சேவையாற்றியோர் கௌரவிப்பு
-மூதூர் நிருபர்-
மாவிலாறு அணைக்கட்டு வெடிப்பெடுத்து ஏற்பட்ட வெள்ள நிலமை மற்றும் டித்வா புயல் காலங்களான் போது மக்களுக்காக களப்பணியாற்றிய அரச உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு திருகோணமலை – சேருவில ரஜ மஹா விகாரையில் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது.
சேருவில மங்க ரஜ மஹா விகாரையால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்போது கிழக்கு மாகாண ஆளுனர், மாவட்ட அரசாங்க அதிபர், முப்படையினர், சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ,சுகாதார துறையினர், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் என பல்வேறு துறை சார்ந்தோர் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர, மாவட்ட அரசாங்க அதிபர் டபள்யூ, ஜீ.எம்.ஹேமந்தகுமார, மாவிலாறு அணைக்கட்டுக்கு பொறுப்பான பொறியியலாளர், சேருவில பிரதேச சபையின் தவிசாளர், சேருவில ரஜ மஹா விகாரையின் விகாராதிபதி, கிழக்கு இரானுவ,பொலிஸ்,கடற்படை உயரதிகாரிகள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




