
வெள்ள அபாயத்திற்கான முன் தயார்நிலை அறிவிப்பு
தெற்கு அந்தமான் கடல் பகுதியை அண்மித்துப் உருவாகி தற்போது வலுப்பெற்று வரும் குறைந்த காற்றழுத்த மண்டலம் தொடர்பாகவும், எதிர்வரும் தினங்களில் அது மேலதிகமாக வலுப்பெறும் , European Centre for Medium-Range Weather Forecasts models (ECMWF) எண்ணியல் முன்கணிப்பு மாதிரிகள் அடிப்படையில் வானிலை ஆய்வுத் திணைக்களத்தால் தொழில்நுட்பமாக பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், வடக்கு, வடமத்திய, கிழக்கு, தெற்கு, ஊவா மற்றும் மேற்கு மாகாணங்களில் 200 மில்லிமீட்டர் விட மிக அதிக மழைப்பொழிவு ஏற்படும் சாத்தியம் தொடர்பாக அதிகாரப்பூர்வ முன்னறிவிப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. ஏனைய மாவட்டங்களிலும் குறிப்பிடத்தக்க அளவிலான மழைப்பொழிவு ஏற்படக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

