தற்போது ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக வட்டுவாகல் பாலம் உடைந்துள்ளது.
இதனால் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவுக்கான பிரதான வீதியின் போக்குவரத்து வட்டுவாகல் பாலத்தினால் தடைப்பட்டுள்ளது.
வட்டுவாகல் பாலத்தின் இன்றைய நிலமைகள் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் நேரடியாக விஜயம் செய்து நிலமைகளை ஆராய்ந்தார்.
இதன்போது முல்லைத்தீவு மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி, மாவட்ட அனர்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர், மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர், ஏனைய உத்தியேகத்தர்களும் இணைந்திருந்தனர்.
இந்த பாலத்தினூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதுடன் இதற்கு மாற்றுவழியாக புதுக்குடியிருப்பிலிருந்து முல்லைத்தீவு வருபவர்கள் புதுக்குடியிருப்பு கேப்பாப்பிலவு வீதியினைப் பயன்படுத்த முடியும்.
மிகக் குறிகிய நாட்களுக்குள் இந்த வட்டுவாகல் பாலத்தினால் பயணத்தினை மேற்கொள்வதற்காக மாவட்டச் செயலாளரின் ஏற்பாட்டில் வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் வீதி அபிவிருத்தித் திணைக்களம் இணைந்து பாலத்தின் திருத்த வேலைகளை ஆரம்பிக்கவுள்ளனர்.







