வெள்ள அனர்த்தத்தின் பின் நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கை

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர்.ஜே.மதன் தலைமையிலான குழுவினர் நுளம்புகள் பெருகாத வண்ணம் புகை விசிறல் நடவடிக்கை களப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சகிலா இஸ்ஸதீன் வழிகாட்டலில் சாய்ந்தமருது பிரதேச வெள்ள அனர்த்தத்தின் பின்னர் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பொலிவேரியன் கிராமத்தில் நுளம்புகள் பெருகாத வண்ணம் புகை விசிறல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நடவடிக்கைகளில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், டெங்கு களத்தடுப்பு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்