
வெள்ளை வானில் சென்று கொள்ளை
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் வடமாராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை இரவு 9:45 மணியளவில் வெள்ளை நிற கே.டி.எச் ரக ஹயஸ் வாகனத்தில் சென்ற சிலர் நபர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்து வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி வீட்டில் இருந்த ஆவணங்கள் மற்றும் பணம் என்பவற்றை எடுத்துச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
பருத்தித்துறை பிரதேச சபையில் பணியாற்றிவரும் ஈஸ்வரன் என்பவரது வீட்டுக்குள் சென்று “உங்களுடைய அடையாள ஆவணங்களை காண்பியுங்கள் என்று தெரிவித்து” அவற்றை பார்வையிட்டனர்.
பின்னர் தொலைபேசிகளும் பறிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுடைய அடையாள அட்டை என்பனவற்றை பார்வையிட்டுள்ளதுடன் அவர் காணி ஒன்றினை கொள்வனவு செய்வதற்காக வைத்திருந்த ஆவணங்கள், சோதிக்கப்பட்டு அந்த பையில் இருந்த ரூபாய் 5 லட்சம் பணம், மற்றும் ஆறரை பவுன் தங்க நகைகளும் வாகனத்தில் சென்ற இனந்தெரியாத நபர்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
