
வெள்ளவத்தை பகுதியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு!
வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று புதன்கிழமை மாலை ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாணந்துறையிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற ரயிலில் மோதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் 60 வயதுக்கு மேற்பட்டவர் என்றும், கடைசியாக கருப்பு நிற கால்சட்டை மற்றும் நீல நிற சட்டை அணிந்திருந்ததாகவும் கருதப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
