வெள்ளவத்தையில் துப்பாக்கிச் சூடு

வெள்ளவத்தை – ராமகிருஸ்ணா மாவத்தை பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் குறித்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளனர்.

எவ்வாறாயினும் இந்த துப்பாக்கிச்சூட்டில் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதுடன், ஹோட்டலிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.