வெள்ளரிக்காய் ஜூஸ் நன்மைகள்

வெள்ளரிக்காய் ஜூஸ் நன்மைகள்

வெள்ளரிக்காய் ஜூஸ் நன்மைகள்

🟢வெள்ளரிக்காய். நீரின் உள்ளடக்கம் அதிகம் கொண்டிருக்க கூடியது. தேசிய ஊட்டச்சத்தின் படி வெள்ளரிக்காயில் நீர், வைட்டமின் கே, வைட்டமின் சி, தாமிரம், மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின்பி குழுமத்தில் உள்ள சில வைட்டமின்கள், வைட்டமின்கள் ஏ, நார்ச்சத்து, எலக்ட்ரோலைட்டுகள் கொண்டுள்ளது.

🟢இதை எளிதாக வீட்டில் தயாரிக்கலாம். சுவையான எளிமையான சத்தான ஆரோக்கிய பானமாக இருக்கும் வெள்ளர்க்காய் உடல் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை உண்டாக்கும். அப்படி என்ன மாதிரியான நன்மைகளை உடலுக்கு வழங்குகிறது என்று என்பதைப் பார்ப்போம்.

🥒வெள்ளரிக்காய் ஜூஸில் அதிக நார்சத்து உள்ளது. அது சிறுகுடலால் எளிதில் உறிஞ்சப்படுகிறது. ஜீரண உறுப்பில் உண்டாகும் நல்ல பாக்டீரியாக்களை பெருக்கச் செய்கிறது. இதனால் பசி நன்றாக எடுக்கும்.

🥒வெள்ளரிச்சாறு 95% வரை தண்ணீர் கொண்டுள்ளது. இதில் அஸ்கார்பிக் அமிலம் மற்றும் காஃபிக் அமிலம் என இரண்டு சேர்மங்களை கொண்டுள்ளது. அதிக நீர் அடக்கத்தை கொண்டிருப்பதால் இது உடலை நீரேற்றமாக வைத்துகொள்வதோடு உடலில் இருக்கும் நச்சுக்களையும் வெளியேற்றக்கூடும்.

🥒உடல் பருமனாக இருப்பவர்கள் வெள்ளரிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், உடல் இளைத்து விடும். இதில் அதிக நீர்சத்து இருக்கிறது. கொழுப்பினை கரைக்க தேவையான ஆன்டி ஆக்ஸிடென்ட்டும் உள்ளன.

🥒கோடையில் உடலின் வெப்பமானது அதிகரிக்கும். எனவே இத்தகைய வெப்பத்தை குறைக்க வெள்ளரிக்காய் ஜூஸை குடித்து வருவது நல்லது.

🥒கூந்தல் சருமம் மற்றும் நகங்களின் அழகை அதிகமாக்குகிறது. தினமும் வெள்ளரிக்காய் ஜூஸ் குடித்தால்,ஒரு மாதத்தில் மேனி மெருகேறும். கண்களின் கருவளையத்தை காணாமல் போகச் செய்யும். சருமத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி விடும்.

🥒மாதவிடாய் காலத்தில் கனமான ரத்தபோக்கு ஈறுகளில் இரத்தப்போக்கு போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்கள் வைட்டமின் கே குறைபாடுடையவராக இருக்கலாம். வெள்ளரி சாற்றில் அதிக அளவு காணப்படும் வைட்டமின் ஆனது சேதமடைந்த திசுக்களை குணப்படுத்துவதோடு இரத்த உறைதலை வேகமாக தூண்டவும் செய்யும்.

🥒நம் உடலிலுள்ள நச்சுக்கள் மற்றும் கொழுப்பு செல்களே பல பாதிப்புகளைத் தரும். தினமும் வெள்ளரிக்காய் ஜூஸினை குடித்து வந்தால், எளிதில் கழிவுகள் வெளியேறும். கொழுப்புகள் கரையும்.

🥒வெள்ளரிக்காய் ஜூஸ் பெண்களுக்கு ஊண்டாகும், மார்பக, கருப்பை, மற்றும் ஒவேரியன் புற்று நோய்களை வர விடாமல் தடுக்கிறது.

🥒வெள்ளரி சாற்றில் காணப்படும் ஆக்ஸிஜனேற்றங்களுக்கு அதிகமாக வைட்டமின் ஏ அளவு உள்ளது. வயதாகும் போது இது கண்பார்வை ஆரோக்கியத்தை பாதுகாகக் செய்யும். விழித்திரையின் மையத்தில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தால் மாலுலர் சிதைவு ஏற்படுகிறது. இதனால் உண்டாகும் பார்வை குறைபாடு சிக்கலுக்கு வெள்ளரிக்காய் சாறு உதவுகிறது.

🥒வெள்ளரிக்காய் நீரினை சமன் செய்ய தேவையான எலக்ரோலைட்ஸ் அதிகம் கொண்டுள்ளது. உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் நிச்சயம் வெள்ளரிக்காய் உதவி செய்யும்.

வெள்ளரிக்காய் ஜூஸ் நன்மைகள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்