வெள்ளம் வழிந்தோடும் சிவனொளிபாதமலை

மத்திய மலைநாட்டில் மாலை வேளையில் பெய்யும் கன மழையால் சிவனொளிபாத மலை உச்சியில் இருந்து படிகளில் அதிகளவில் மழை நீர் வடிந்து செல்லும் நிலையில் உள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் மலைக்கு செல்லும் படிக்கட்டுகள் வழியாக நீர் வரத்து ஏற்பட்டு உள்ளதுடன் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் அதிக அளவில் இரவு வேளையில் மலை உச்சிக்கு சென்று காலை வேளையில் சூரிய உதயம் பார்த்து விட்டு திரும்பி வரும் போது வழுக்கி விழும் அபாயம் உள்ளது.

மேலும் எதிர் வரும் டிசம்பர் மாதம் 26 ம் திகதி முதல் சிவனொளிபாத மலை பருவகாலம் ஆரம்பமாவதால் அதற்கு முன்னர் இந்த வடிகால் அமைப்பு செய்ய வேண்டும் எனவும் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவனம் செலுத்தி படிக்கட்டு பகுதியில் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாத்திரிகர்கள் மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

வெள்ளம் வழிந்தோடும் சிவனொளிபாதமலை

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்