வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வெருகல் பிரதேச செயலகப் பிரிவு

-மூதூர் நிருபர்-

வெள்ளம் காரணமாக வெருகல் பிரதேச செயலகப் பிரிவும் பாதிக்கப்பட்டுள்ளது.

வெருகலில் வெள்ளத்தினால் 1745 குடும்பங்களைச் சேர்ந்த 5210 நபர்கள் பாதிக்கப்பட்டு 10 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வீடுகள்,அரச நிறுவனங்கள்,வீதிகள், விளை நிலங்களும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சமைத்த உணவுகளை வெருகல் பிரதேச செயலகம் வழங்கி வருகிறது.

வெருகல் -பூநகர் இடைத்தங்கல் முகாமிற்கு விமானப்படை ஹெலிகொப்டர் மூலம் அத்தியவசிய பொருட்கள் இன்று பகல் கொண்டு வரப்பட்டன.