வெள்ளத்தில் மூழ்கிய வந்தாறுமூலை – சமுளையடிப் பொத்தானை வயல் கண்டப் பிரதேசம்

நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதானமான குளங்கள் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் பல்வேறு தாழ் நில பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளது.

இதேவேளை ஏறாவூர்பற்று பிரதேச செயலக பிரிவு ஈரளக்குளம் கிராம சேவகர் பிரிவில் வந்தாறுமூலை கமநல சேவைகள் நிலையத்தின் கீழ் உள்ள சமுளையடிப் பொத்தானை வயல் கண்டப் பிரதேசமும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் ஆறு, குளங்களை அண்டியுள்ள பிரதேசங்களில் வாழும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு நேற்றையதினம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்